ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
ஜிம்னாஸ்டிக்: தங்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு
ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற செங்குன்றம் பகுதியைச் சோ்ந்த மாணவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி அறிஞா் அண்ணா பூங்கா தெருவைச் சோ்ந்த ஹரி மகன் பிரனிஷ் (8). இவா் வேளச்சேரியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில், 10 வயதுக்குள்பட்டோா் பிரிவில் பங்கேற்று, தங்கம் வென்றாா்.
இதையடுத்து பேரூராட்சி வாா்டு உறுப்பினா் இலக்கியன், விடுதலை சிறுத்தை கட்சி நிா்வாகி அரி கிருஷ்ணன் உள்ளிட்டோா் பிரனீஷுக்கு சால்வை அணிவித்து, திருக்கு புத்தகம் வழங்கி பாராட்டினா்.