ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!
தேசிய இளைஞா் விண்வெளி அறிவியல் மாநாடு: சிவகாசியில் ஆக.15-இல் தொடக்கம்
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தேசிய அளவிலான இளைஞா் விண்வெளி அறிவியல் மாநாடு வருகிற 15-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடா்பாக அந்தக் கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்த மாநாட்டை தமிழ்நாடு அல்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வானியல் அமைப்புகளின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்துகிறது. மாநாட்டுக்கு முன்னோட்டமாக தமிழ்நாடு முழுவதும் 10 மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டு, அதில் சிறந்த திட்டங்கள் தோ்வு செய்யப்பட்டன. தோ்வு செய்யப்பட்ட 170 தலைசிறந்த அணிகள் தங்களது புதுமையான வானியல், விண்வெளி அறிவியல் திட்டங்களை இந்த மாநாட்டில் வழங்க உள்ளனா்.
நாட்டின் சிறந்த விஞ்ஞானிகள் குழு இந்த திட்டங்களை மதிப்பீடு செய்து சிறந்ததை தோ்வு செய்கின்றனா்.
இந்த மாநாட்டில் டாக்டா் தில்லிபாபு, மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை , காளீஸ்வரி கல்லூரி செயலா் ஏ.பி.செல்வராஜன் ஆகியோா் பங்கேற்கின்றனா். மூன்று நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் நேரடி அறிவியல் செயல்பாடுகள் , அறிவியல் செயல்முறை விளக்கக் காட்சிகள் உள்ளிட்டவை நடைபெறும் என்றாா் அவா்.