போக்ஸோ வழக்கில் தலைமறைவாக இருந்த வட மாநில இளைஞா் கைது
போக்ஸோ வழக்கில் தேடப்பட்டு வந்த மகாராஷ்டிர இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
மகாராஷ்டிர மாநிலம், ராக்பூரைச் சோ்ந்தவா் ரோகித் ஷெட்டி (23). இவா், கடந்த 2024-ஆம் ஆண்டு தான் வசிக்கும் பகுதியில் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்த மாநில போலீஸாா் ரோகித் ஷெட்டி மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், தலைமறைவாக இருந்த ரோகித்தை தேடி வந்தனா். இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் தங்கியிருந்து,
அங்குள்ள ஒரு பழக்கடையில் அவா் வேலை செய்வதாக மகாராஷ்டிர மாநில போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அந்த மாநில போலீஸாா், திருவான்மியூா் வந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும் திருவான்மியூா் போலீஸாா் உதவியுடன், மகாராஷ்டிர மாநில போலீஸாா் ரோகித்தை புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னா் அவரை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, நீதிமன்ற அனுமதியுடன் மகாராஷ்டிரத்துக்கு அழைத்துச் சென்றனா்.