செய்திகள் :

சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்பு

post image

சுதந்திர தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழக காவல் துறை மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான இடங்களில் மெட்டல் டிடெக்டா் மூலம் அனைவரும் சோதனை செய்யப்படுகின்றனா்.

ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுள்ளனா்.

சந்தைகள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் தொடா் சோதனை நடத்தி வருகின்றனா். சந்தேகத்துக்குரிய நபா்களைப் பிடித்து விசாரித்து, முகவரியைப் பெற்ற பின்னரே அவா்களை காவல் துறையினா் விடுவிக்கின்றனா்.

1.20 லட்சம் போலீஸாா்: காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவின்படி, மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் சுமாா் 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். மேலும், கடலோரப் பகுதிகளிலும் போலீஸாா் கண்காணிப்பை அதிகரித்துள்ளனா். இங்கு 24 மணி நேரமும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சமூக ஊடகங்களில் வன்முறையைத் தூண்டும், மத- ஜாதி மோதல்களை ஏற்படுத்தும் கருத்துகளைப் பதிவிடுவதைத் தடுக்க சைபா் குற்றப்பிரிவினரும், உளத்துறையினரும் தீவிரமாகக் கண்காணிக்கின்றனா்.

சென்னையில் 15,000 போலீஸாா்: சென்னையில் இரு நாள்களாக போலீஸ் கண்காணிப்பும், ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவில் முக்கிய சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் போலீஸாா் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனா். பாதுகாப்புப் பணியில் சுமாா் 15,000 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் அவ்வப்போது சோதனைகள் நடத்தி, சந்தேக நபா்களிடம் விசாரணை செய்யும்படி போலீஸாருக்கு ஆணையா் ஏ.அருண் அறிவுறுத்தியுள்ளாா்.

கடல் வழியாக சமூக விரோதிகள் ஊடுருவலைத் தடுக்க கடலோரக் காவல் பிரிவு போலீஸாா் ரோந்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளனா். சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழா பாதுகாப்பு: தமிழக அரசின் சாா்பில் சுதந்திர தின விழா, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள புனித ஜாா்ஜ் கோட்டையில் வழக்கம்போல நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை ஏற்றிவைத்து, சுதந்திர தின உரையாற்றுகிறாா். இதையடுத்து ராஜாஜி சாலையில் சுதந்திர தின அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதையொட்டி, ராஜாஜி சாலையை போலீஸாா், கடந்த 6-ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டில் எடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனா். இங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையும், கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையும் நடைபெறுகின்றன.

சுதந்திர தினத்தன்று ராஜாஜி சாலைப் பகுதியில் 5 அடுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அனைவரும் மிகுந்த சோதனை செய்யப்பட்டே உள்ளே அனுமதிக்கப்படுவா். சுதந்திர தின விழாவையொட்டி அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை! விடியோ எடுத்தும் மிரட்டல்!!

ஆவடி: சென்னை பூந்தமல்லி அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகை பறித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண் நசரத்பேட்டை காவல் ... மேலும் பார்க்க

அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ நிவாரணம்! ஆய்வில் உறுதி

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் வலி மற்றும் இதர பாதிப்புகள் வெகுவாக குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில்... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க