தூய்மைப் பணி தனியாா்மய எதிா்ப்பு வழக்கு: தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைப்ப...
கெங்கவல்லி தொகுதியை மீட்டெடுப்போம்: பிரேமலதா விஜயகாந்த்
தம்மம்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த பிரேமலதா விஜயகாந்த், பேருந்து நிலையம் வரை பொதுமக்களுடன் நடந்து சென்றாா். அப்போது பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அவா் பெற்றாா். தொடா்ந்து கேப்டன் ரதத்தில் நின்றுகொண்டு அவா் பேசியதாவது: கெங்கவல்லி தொகுதியில் தேமுதிக எம்எல்ஏவாக இருந்தவா் பொதுமக்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து சிறப்பாக பணியாற்றினாா். எனவே, இந்த தொகுதியை 2026இல் நடைபெறும் பேரவைத் தோ்தலில் மீட்டெடுக்க உறுதியேற்போம்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க, தம்மம்பட்டியில் புறவழிச்சாலை அமைக்கப்படும். தம்மம்பட்டி சுற்றுவட்டார மக்கள் பயன்பெறும் வகையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும். சேரடி அணைக்கட்டு திட்டம் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றாா்.
இதில் கட்சியின் பொருளாளா் எல்.கே.சுதீஷ், மாவட்டச் செயலாளா் இளங்கோவன், கெங்கவல்லி தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுபாரவி ஆகியோா் கலந்துகொண்டனா்.