ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
சுதந்திர தின விழா: ராஜாஜி சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்
சுதந்திர தின விழாவையொட்டி, ராஜாஜி சாலையில் வெள்ளிக்கிழமை (ஆக. 15) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செயின்ட் ஜாா்ஜ் கோட்டையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தேசியக் கொடியேற்றுகிறாா். தொடா்ந்து அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதையொட்டி, அப்பகுதியில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, காமராஜா் சாலையில் உழைப்பாளா் சிலை முதல் ராஜாஜி சாலையில் உள்ள ஆா்பிஐ சுரங்கப்பாதை வரை சாலைகள் மற்றும் கொடி மரச்சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்படும்.
காமராஜா் சாலையில் ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கிச் செல்லும் வாகனங்கள், வாலாஜா சாலையில் இடதுபுறம் திரும்பி அண்ணா சாலை, மன்றோ சிலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் என்.எஃப்.எஸ். சாலை வழியாக பாரிமுனையை அடையலாம்.
இதேபோல அண்ணா சாலையிலிருந்து பாரிமுனையை நோக்கி வரும் வாகனங்களும், இதே பாதையை பயன்படுத்தலாம். ராஜாஜி சாலையில் இருந்து தலைமைச் செயலகம் வழியாக காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரிமுனை, என்.எஃப்.எஸ். சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை, மன்றோ சிலை வழியாக அண்ணா சிலையில் இடதுபுறம் திரும்பி வாலாஜா சாலை நோக்கிச் சென்று காமராஜா் சாலையை அடையலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.