செய்திகள் :

``கேப்டன் சோபியா குரேஷி-க்கு நேரில் கொடுப்பேன்'' -`ஆபரேஷன் சிந்தூர்' சேலை தயாரித்த நெசவாளர் உருக்கம்

post image

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந்தியா, பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளைக் குறிவைத்து, அதிரடியாக நடத்தியது.

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் திடீரென்று ட்ரோன் தாக்குதலை மே 8 ஆம் தேதி இரவு நடத்தியது. அதனை வானிலேயே தடுத்து அழித்ததாக தெரிவித்தது இந்திய ராணுவம்.

”ஆபரேஷன் சிந்தூர்” சேலை -

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த விஜய் பவசிங் என்ற நெசவாளரின் சேலை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆப்ரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக ஒரு பனாராசி சேலையை விஜய் பவசிங் வடிவமைத்துள்ளார்.

இந்திய ராணுவத்தை கௌரவிக்கும் விதமாகவும் பெருமை கொள்ளும் விதமாகவும் ரபேல், எஸ் 400 உள்ளிட்ட இந்திய ராணுவத்தின் முக்கிய ஆயுதங்களை வரைபடங்களாக சேலையில் வடிவமைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த சேலையில் `ஆபரேஷன் சிந்தூர்' எனவும் எழுத்தில் நெய்துள்ளனர்.

இந்த சேலையை கேப்டன் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோருக்கு நேரில் வழங்க உள்ளதாக நெசவாளர் உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த பனாராசி சேலை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Abraham Lincoln: ஆபிரகாம் லிங்கன் கொலை: 'ரத்தக்கறை படித்த கையுறை' ரூ.12 கோடிக்கு ஏலம்!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் கொலை செய்யப்பட்ட இரவில் அணிந்திருந்த உடைகள் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தின் மூலம் லிங்கன் அறக்கட்டளைக்கு அதன் 20 ஆண்டுக்கால கடன்களை அடைக்க 7.9 மில்லியன் ட... மேலும் பார்க்க

US: விமானத்தில் அருகில் இருந்த பயணியை கட்டிப்பிடித்து முத்தமிட முயன்ற பெண்.. 64 லட்சம் அபராதம்!

விமானத்தில் பயணித்தபோது முன்பின் தெரியாத பயணிக்கு முத்தம் கொடுக்க முயன்ற பெண்ணுக்கு $ 77,272 ( இந்திய மதிப்பில் தோராயமாக 64 லட்சமாகும்) அபராதம் விதித்துள்ளனர்.லாஸ் வேகாஸிலிருந்து அட்லாண்டா செல்லும் டெ... மேலும் பார்க்க

`எலிகள் தொட்ட தண்ணீர் மருந்து' - பிரதமர் மோடி சென்ற கர்னி மாதா கோயில் வரலாறு என்ன?

பிரதமர் மோடி நேற்று (மே 22) ராஜஸ்தான் மாநிலம் பிகானருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு முடிவுற்ற ரூ.26,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார். அதற்குப் பிறகு தேஷ்னோக் பகுதியில் இருக்கும் பு... மேலும் பார்க்க

Siddharth: ``சித்துவுக்காக சிந்தூர்'' - அதிதி ராவ் ஹைதரி குங்குமம் குறித்து சித்தார்த் பதிவு!

'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் அதிதி ராவ் ஹைதாரியுடன் நடிகர் சித்தார்த் இணைந்து நடித்தார். அப்போதிருந்து இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதை இருவரும் உறுதிப்படுத்தி, கடந்த ஆண்டு... மேலும் பார்க்க

கேன்ஸில் `மோடி நெக்லஸ்' அணிந்து வந்தது ஏன்? - வைரலான நடிகை சொல்லும் விளக்கம்!

ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபலங்கள் அணியும் ஆடைகளும் அணிகலன்களும் பரவலாக பேசப்படுவதுண்டு. இந்த ஆண்டு வளர்ந்துவரும் இந்திய நடிகையும் மாடலுமான ருச்சி குஜ்ஜார், தனது ஃபேஷன் மூலம் உலகம் மு... மேலும் பார்க்க

``பொற்கோயில் மீது பாகிஸ்தான் ஏவுகணை ஒன்று கூட தாக்காமல் முறியடித்தோம்'' - விவரிக்கும் மேஜர் ஜெனரல்!

பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை அழிக்க மத்திய அரசு ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 7-ம் தேதி இரவு அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இத்தாக்குத... மேலும் பார்க்க