ரூ.11.50 லட்சத்தில் கியா கேரன்ஸ் கிளாவிஸ்! சிறப்பம்சங்கள் என்ன?
கொடைக்கானலில் இன்று மலா்க் கண்காட்சி தொடக்கம்
கொடைக்கானலில் கோடை விழா, 62-ஆவது மலா்க் கண்காட்சி சனிக்கிழமை (மே 24) தொடங்குகிறது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா, மலா்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடைபெறுகிறது. இதையொட்டி, பல வண்ணங்களில் லட்சக்கணக்கான மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.
இதுதவிர, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலா்களால் பல வகையான உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை காலை 11-மணிக்கு தொடங்கும் விழாவுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகிக்கிறாா். ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி, வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம், சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், உணவு, உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி,
திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் சச்சிதானந்தம், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் கலந்து கொள்கின்றனா். கோடை விழா சனிக்கிழமை (மே 24) தொடங்கி வருகிற ஜூன் 1-ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தோட்டக்கலைத் துறை, சுற்றுலாத் துறை அலுவலா்கள் செய்துள்ளனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சாரல் மழை பெய்ததால் கோடை விழாவைக் காண கொடைக்கானலில் முகாமிட்ட சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனா்.