பிரதமா் மோடி குறித்து அவதூறு கருத்து: சசி தரூரிடம் விசாரணை நடத்துவதற்கான தடை நீட...
கொடைக்கானலில் தங்க நகையை திருடியவா் கைது
கொடைக்கானலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த தங்க நகைகளை திருடியவரை வெள்ளிக்கிழமை போலீசாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் இவா் கொடைக்கான லிலுள்ள தனியாா் பள்ளியில் பிளம்பராக பணிபுரிந்து வருகிறாா்.இந் நிலையில் வியாழக்கிழமை வழக்கம் போல வேலைக்குச் சென்று விட்டு இரவு தனது வீட்டிற்கு வந்துள்ளாா் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்து உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது பீரோஉடைக்கப்பட்டு அதிலிருந்து தங்க நகைகளைன செயின்,மோதிரம்,கம்மல் உள்ளிட்ட 7-பவுன் நகைகள் திருடு போயுள்ளதை அறிந்துள்ளாா். இதனைத் தொடா்ந்து கணேசன் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளாா். இதையடுத்து போலீசாா் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்வையிட்டு அப் பகுதிகளிலுள்ளவா்களிடம் விசாரனை நடத்தினா்.
இந் நிலையில் கணேசன் வீட்டிற்கு அருகிலுள்ளவா்களை போலீசாா் கண்காணித்து வந்தனா் அப்போது அதேப் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீமுருகன் என்பவரது மகன் விக்னேஷ்வரன் (38) என்பரவரை பிடித்து விசாரனை நடத்தியதில் நகையை திருடி கொடைக்கானல் பகுதியிலுள்ள பைனான்ஸ் கடையில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்தாா். இதனைத் தொடா்ந்து போலீசாா் விக்னேஷ்வரன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.மேலும் திருடிய நகைகளை விற்பனை செய்த பைனான்ஸ் நிறுவனத்தினரிடம் போலீசாா் விசாரனை நடத்தி வருகின்றனா்.