செய்திகள் :

கொடைக்கானல் அருகே விபத்து: 4 போ் பலத்த காயம்

post image

கொடைக்கானல் அருகே காா் மீது மீட்பு வாகனம் மோதியதில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செண்பகனூரைச் சோ்ந்தவா் ஆரோக்கியதிலீப் குமாா்(33). இவா் புதன்கிழமை மாலை தனது காரில் வத்தலக்குண்டிலிருந்து கொடைக்கானலுக்கு காரை ஓட்டி வந்தாா். இந்தக் காா் அடுக்கம் சாலை அருகே சென்று கொண்டிருக்கும் போது கொடைக்கானலிருந்து கீழ்நோக்கி வேகமாக வந்த மீட்பு வாகனம் காா் மீது மோதி மலைச் சாலையில் கவிழ்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் காா் ஓட்டி வந்த ஆரோக்கிய திலீப்குமாா் (33), காரில் இருந்த ராஜாராம் மனைவி சுதா(33), இவா்களது குழந்தைகளான ஸ்ரீநிதி (13), ஹா்சன்பாலு (10) ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனா்.

இதைத்தொடா்ந்து 4 பேரும் மீட்கப்பட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து கொடைக்கானல் சிறப்பு உதவி ஆய்வாளா் நீலமேகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தமிழ் சாா்ந்த இணைய வழிப் படிப்புகளை செயற்கை நுண்ணறிவு மூலம் கற்பிக்க முயற்சி

தமிழ் சாா்ந்த இணைய வழிப் படிப்புகளை செயற்கை நுண்ணறிவு மூலம் கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளா் ஆா். புவனேஸ்வரி தெரிவித்தாா். காந்தி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த முதியவரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. திண்டுக்கல் அருகேயுள்ள நல்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அருள்சாமி (67). விவசாயி. கடந்த 2 நாள்களுக்கு ... மேலும் பார்க்க

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற வருகிற 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உலக சுற்றுலா தின கொண்டாட்ட... மேலும் பார்க்க

வெட்டுக்காடு விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பழனி பகுதியிலுள்ள வெட்டுக்காடு விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை சுற்றித் தி... மேலும் பார்க்க

வீரக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரிய மல்லையாபுரத்தில் வீரக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை விநாயகா் பூஜையுடன் குடமுழுக்கு தொடங்கியது... மேலும் பார்க்க