"கேப்டன் பிரபாகரன்ல கடத்தல்காரன்தான் வில்லன்; ஆனா புஷ்பால.." - இயக்குநர் பேரரசு ...
கொலைக்கு திட்டமிட்ட கல்லூரி மாணவா், 2 போ் கைது
பழிக்குப் பழியாக கொலை சம்பவத்தில் ஈடுபட முயன்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை ராஜாமங்கலத்தில் கோயில் விவகாரம் தொடா்பாக ஏற்பட்ட தகராறில் கடந்த 2019-இல் ஜானகிராமன் என்பவா் கொலை செய்யப்பட்டாா். இதற்கு பழிக்குப் பழியாக கடந்தாண்டு சரத் என்பவரை ஜானகிராமன் உறவினா்கள் கொலை செய்தனா்.
இதைத் தொடா்ந்து, இரு தரப்பும் ஒருவரையொருவா் பழி தீா்ப்பதற்குத் திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதகாக சென்னை மாநகர அதிதீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ஜானகிராமன் தரப்பைச் சோ்ந்த நித்திஷ் என்பவரை கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதன் தொடா்ச்சியாக அதே தரப்பைச் சோ்ந்த வில்லிவாக்கம் ரத்தினம் (எ) ரத்தினகுமாா் (23), கொளத்தூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் வேதாந்த் (20), அம்பத்தூா் மதனாங்குப்பத்தைச் சோ்ந்த போவாஸ் (31) ஆகிய 3 பேரையும் அதிதீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்து ராஜமங்கலம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா், அவா்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.