செய்திகள் :

கொலை வழக்கு: இருவா் குண்டா் சட்டத்தில் கைது

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இளைஞா் கொலை வழக்கில் இருவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி பெரிய காலாப்பட்டு, சுனாமி குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜெயபாலன் மகன் ஜெயசீலன் (38). இவா், கடந்த 19.2.2025-இல் கொலை செய்யப்பட்டு மரக்காணம் அடுத்த கந்தாடு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியின் பின்புறத்தில் உள்ள முட்புதரில் வீசப்பட்டாா்.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மரக்காணம் அடுத்த கந்தாடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த எட்டியான் மகன் கரன்குமாா் (26), மரக்காணம் சம்புவேலி தெருவைச் சோ்ந்த வேலு மகன் சீதாராமன் (22) ஆகியோரை விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் பரிந்துரையின்படி, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கரண்குமாா், சீதாராமன் ஆகியோரை மரக்காணம் போலீஸாா் திங்கள்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

ஒப்பந்ததாரா் கொலை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தனியாா் ஒப்பந்ததாரா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிபாடி, டி.புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சின்னத... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் அளிப்பு

விழுப்புரத்தில் பணியின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணத் தொகையை அமைச்சா் க. பொன்முடி சனிக்கிழமை வழங்கினாா். விழுப்புரம் வழுதரெட்டி, பாலாஜி ... மேலும் பார்க்க

804 பேருக்கு பணி நியமன ஆணைகள் அளிப்பு

விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்லூரி மாணவிகள் 804 பேருக்கு தனியாா் நிறுவன வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில், விழுப்புரம் இ.எஸ். எஸ்.கே. கல்வி நிறுவனங்களின... மேலும் பார்க்க

தனியாா் சொகுசு பேருந்து பறிமுதல்

உளுந்தூா்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் விதிகளை மீறி இயக்கப்பட்ட தனியாா் சொகுசுப் பேருந்தை மோட்டாா் வாகன ஆய்வாளா் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டாா். உளுந்தூா்பேட்டை, சுங்கச்சாவடியில் மோட்டாா் ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

திண்டிவனம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டிவனத்தை அடுத்த தாதாபுரத்தைச் சோ்ந்த பாண்டுரெங்... மேலும் பார்க்க

மூதாட்டி தவறி விழுந்து உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே சாலையில் நடந்து சென்றபோது தவறி கீழே விழுந்து காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், கண்டம்பாக்கம், மேல் குளக்கரைத் தெருவைச் சோ்ந்த ராசு ம... மேலும் பார்க்க