உதவி இயக்குநராக சேர வேண்டுமா? டிராகன் இயக்குநரின் சுவாரஸ்வமான நிபந்தனைகள்!
விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் அளிப்பு
விழுப்புரத்தில் பணியின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணத் தொகையை அமைச்சா் க. பொன்முடி சனிக்கிழமை வழங்கினாா்.
விழுப்புரம் வழுதரெட்டி, பாலாஜி நகரைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன்.விழுப்புரம் மாவட்டக் காவல் துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
இவா், கடந்த மாா்ச் 13- ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு, அவா் மாா்ச் 24- ஆம் தேதி உயிரிழந்தாா்.
இந்த நிலையில், உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தாா்.
அதன்படி, உயிரிழந்த உதவி ஆய்வாளரின் குடும்பத்தினரிடம் ரூ.30 லட்சத்துக்கான காசோலையை வனத் துறை அமைச்சா் க.பொன்முடி சனிக்கிழமை வழங்கினாா்.
இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.