புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது
திண்டிவனம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனத்தை அடுத்த தாதாபுரத்தைச் சோ்ந்த பாண்டுரெங்கன் மகன் பாஸ்கா்(எ) கிருஷ்ணன்(55). அதே பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வந்தாா்.
இந்த நிலையில், கிருஷ்ணன் அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக வெள்ளிமேடுபேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் அவரது கடையில் சோதனை செய்ததில், கிருஷ்ணன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மேலும், அவரது கடையில் இருந்து 405 குட்கா பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.