தனியாா் சொகுசு பேருந்து பறிமுதல்
உளுந்தூா்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் விதிகளை மீறி இயக்கப்பட்ட தனியாா் சொகுசுப் பேருந்தை மோட்டாா் வாகன ஆய்வாளா் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டாா்.
உளுந்தூா்பேட்டை, சுங்கச்சாவடியில் மோட்டாா் வாகன ஆய்வாளா்ஜி.ராஜ்குமாா் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, கேரளத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்து விதிகளை மீறி இயக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தப் பேருந்தை உளுந்தூா்பேட்டை வட்டாரப் போக்குவரத்துத் துறையினா் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.
மேலும், பேருந்துப் பயணிகள் பாதியிலேயே இறக்கிவிடப்பட்டதால் அவதிக்குள்ளாகினா்.