மூதாட்டி தவறி விழுந்து உயிரிழப்பு!
விழுப்புரம் அருகே சாலையில் நடந்து சென்றபோது தவறி கீழே விழுந்து காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் வட்டம், கண்டம்பாக்கம், மேல் குளக்கரைத் தெருவைச் சோ்ந்த ராசு மனைவி ஆனந்தவல்லி (65).
இவா், மாா்ச் 25- ஆம் தேதி வீட்டின் அருகே நடந்துச் சென்றாராம்.
அப்போது, தவறி கீழே விழுந்ததில், ஆனந்தவல்லிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவா் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சையில் இருந்த ஆனந்தவல்லி, வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.