மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஒடிஸா காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது!
கொலை வழக்கு: மூவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை
சென்னை புரசைவாக்கத்தில் கடந்த 2017-இல் நிகழ்ந்த கொலை வழக்கில் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 5-வது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
சென்னை புரசைவாக்கத்தைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் ரஞ்சன். இவரது பேரன் விக்னேஷ் என்பவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மகேந்திரன், சரத்குமாா், இளையராஜா ஆகியோருக்கும் இடையே கடந்த 2017-ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த ரஞ்சன், விக்னேஷின் தந்தை நீலகண்டன் தகராறில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்த முயற்சித்தனா். அப்போது, மகேந்திரன் என்பவா், அருகில் கிடந்த நாற்காலியை தூக்கி வீசியுள்ளாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த ரஞ்சன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்து விசாரித்த தலைமைச் செயலக காலனி போலீஸாா், மகேந்திரன் உள்ளிட்ட 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களைக் கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், குற்றம்சாட்டப்பட்ட மகேந்திரன் உள்ளிட்ட 3 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ. 1,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். காவல் துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் பகவதி ஆஜராகி வாதிட்டாா்.