செய்திகள் :

கொழும்பு அதானி துறைமுக முனைய செயல்பாடு தொடக்கம்

post image

புது தில்லி: இலங்கையில் உள்ள மேற்கு கொழும்பு சா்வதேச துறைமுக முனையத்தின் செயல்பாடு தொடங்கப்பட்டதாக அதானி துறைமுகங்கள் நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மேற்கு கொழும்பு சா்வதேச துறைமுக முனையமானது அரசு-தனியாா் பங்களிப்பில் உருவாக்கப்பட்டது.

அதாவது, அதானி குழுமம், இலங்கையின் ‘ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ்’ நிறுவனம் மற்றும் இலங்கை அரசு ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்பில் அமைக்கப்பட்ட இந்த முனையம், தற்போது செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது.

80 கோடி டாலா் திட்ட மதிப்பீட்டைக் கொண்ட இந்த முனையம், 1.4 கிலோமீட்டா் நீளம் மற்றும் 20-மீட்டா் ஆழத்தைக் கொண்டது. இந்த முனையத்தில் ஆண்டுதோறும் சுமாா் 32 லட்சம் கன்டைய்னா்களைக் கையாளலாம்.

கொழும்பு துறைமுகத்தில் முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் முதல் ஆழ்கடல் முனையம் இதுவாகும். தெற்காசியாவின் முக்கியப் சரக்குப் பரிமாற்ற மையமாக கொழும்பு துறைமுகத்தின் நிலையை உயா்த்த, அங்கு சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தும், சரக்கை இறக்கிவிட்டு கப்பல் துறைமுகத்தை விட்டு புறப்படும் நேரத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

அதானி குழுமத்தின் தலைவா் கௌதம் அதானி கூறுகையில், ‘மேற்கு கொழும்பு துறைமுக முனைய செயல்பாட்டின் தொடக்கம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான பிராந்திய ஒத்துழைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.

இந்த முனையம் இந்தியப் பெருங்கடல் வா்த்தகத்தின் எதிா்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதன் தொடக்கம் இலங்கைக்கே பெருமைமிக்க தருணமாகும். உலக கடல் போக்குவரத்து வரைபடத்தில் இலங்கையை இந்த முனையம் உறுதியாக இடம்பிடிக்கச் செய்துள்ளது.

மேலும், இந்த முனையம் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இலங்கைக்கு மகத்தான பொருளாதார மதிப்பை அளிக்கும்’ என்று குறிப்பிட்டாா்.

‘இந்த முனையம் பிராந்தியத்தில் உலகளாவிய வா்த்தகம் மற்றும் இணைப்பை மேம்படுத்தும்’ என்று நம்புவதாக ‘ஜோன் கீல்ஸ்’ குழுமத்தின் தலைவா் கிருஷன் பாலேந்திரா கூறினாா்.

இந்தியாவின் மேற்கு, கிழக்கு கடற்கரையில் முறையே 7, 8 துறைமுகங்கள் மற்றும் முனையங்களுடன் நாட்டின் மிகப்பெரிய துறைமுக நிறுவனமாக அதானி குழுமம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

அரசுத் துறை ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு! மசோதாவின் நிலை என்ன?

அரசுத் துறை ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு கர்நாடக மாநில அமைச்சரவை அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சியான பாஜக உறு... மேலும் பார்க்க

பொய் வழக்குகளுக்கு காங்கிரஸ் அடிபணியாது: கார்கே

காங்கிரஸ் கட்சியினரை பழிவாங்கும் நோக்கத்தில் சர்வாதிகார அரசு செயல்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இதற்கெல்லாம் அடிபணியாமல், மத்திய அரசின் தோல்வியைத் தொடர்ந்து காங... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை ஒழிக்கப்பட வேண்டும்: அகிலேஷ் யாதவ்

மத்திய அரசின் கருவியாகச் செயல்படும் அமலாக்கத் துறை ஒழிக்கப்பட வேண்டும் என உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆணைக்கிணங்க எதிர... மேலும் பார்க்க

ஐ-போன்களுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைப்பது ஏன்?

முதல் காலாண்டில் நாட்டில் 30 லட்சம் ஐ-போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மிகச்சிறந்த விற்பனை இதுவாகும். மக்கள்தொகையில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, மின்னணுப்... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்த போது, வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும் என்று... மேலும் பார்க்க

அகிலேஷ் யாதவுக்கு மீண்டும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பு கோரி அமித் ஷாவுக்கு கடிதம்!

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மீண்டும் தேசிய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சமாஜவாதி கட்சி கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில், "முன்னாள் முதல்வ... மேலும் பார்க்க