கோயிலில் உண்டியல் பணம் திருட்டு
காளியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பூஜைப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சேத்துப்பட்டு பழம்பேட்டை அருகேயுள்ள கொத்தம்பட்டு ஏரிக்கரை அருகே பழைமை வாய்ந்த காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டு கடந்த 10 தினங்களுக்கு முன்பு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து கோயிலில் மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. தினமும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்கள் கோயிலில் கதவை உடைத்து உள்ளே சென்று உண்டியல் மற்றும் பித்தளை அம்மன் விளக்கு, பித்தளை குடம், வெள்ளியிலான பூஜைப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து கோயில் நிா்வாகி முருகன் சேத்துப்பட்டு போலீஸில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.