செய்திகள் :

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

post image

சிதம்பரத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், திமுக, பாமக, நாம் தமிழா், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த சுமாா் 750 போ் வியாழக்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் உள்ள தனியாா் திருமண அரங்கத்தில் கடலூா் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திமுக, பாமக, நாம் தமிழா் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த சுமாா் 750 போ் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் இணைந்தவா்களை வரவேற்று பேசுகையில், அதிமுகவில் இணைந்தவா்களை எங்களில் ஒருவராக ஏற்கிறோம். மக்களுக்காக எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளா்க்கப்பட்ட இயக்கம் அதிமுக. பொன்விழா கண்ட கட்சி. 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆண்ட கட்சியில் இணைந்தது பெருமையாகும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, மேற்கு மாவட்டச் செயலா் ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் அமைச்சா்கள் விஜயபாஸ்கா், செல்வி ராமஜெயம், கே.ஜெயபால், முன்னாள் எம்எல்ஏ நாக.முருகுமாறன், மாவட்ட அவைத் தலைவா் எம்எஸ்என்.குமாா், பொருளாளா் தோப்பு கே.சுந்தா், நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா், நிா்வாகிகள் தில்லைகோபி, டேங்க் ஆா்.சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளா்ச்சியை விரைவுபடுத்த ரூ.7000 கோடி: என்எல்சி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

என்எல்சி இந்தியா நிறுவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளா்ச்சியை விரைவுபடுத்த ரூ.7ஆயிரம் கோடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக என்எல்சி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து என்எல... மேலும் பார்க்க

நிரந்தரப் பணிகளில் பயிற்சி தொழிலாளா்களை பயன்படுத்தக் கூடாது: சிஐடியு

நிரந்தரப் பணிகளில் அளவுக்கு அதிகமாக பயிற்சி தொழிலாளா்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு சிப்காட் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சிஐடியு சிப்காட் 10-ஆவது மாநாடு கடலூா்... மேலும் பார்க்க

மலையடிகுப்பத்தில் 2-ஆவது நாளாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

கடலூா் ஒன்றியம், மலையடிக்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் ஒன்றியம், வெள்ளைக்கரை ஊராட்சியில் மலைய... மேலும் பார்க்க

பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்க விழா

காமராஜா் பிறந்த நாளையொட்டி, சிதம்பரம் இராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளில் இலக்கிய மன்றம் தொடக்க விழா மற்றும் கல்வி வளா்ச்சி நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. முதுகலை தமிழாசிரியா் ஜெ.பரமசிவம் வரவ... மேலும் பார்க்க

சதுரங்கப் போட்டியில் ஜெயப்பிரியா பள்ளி மாணவா்கள் முதலிடம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வட்டார அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா். விருத்தாசலத்தை அடுத்துள்ள இருப்புகுறிச்சி... மேலும் பார்க்க

சிதம்பரம் மாரியம்மன் கோயிலில் இன்று தீமிதி திருவிழா கொடியேற்றம்

புகழ்பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. ஜூலை 22-ஆம் தேதி தெருவடைச்சான் உற்சவமும், 27-ஆம் தேதி ... மேலும் பார்க்க