ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை இரவு 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையில் 508 பெண்கள் கலந்துகொண்டு பூஜை செய்தனா். மேலும், கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
மேலும், வெள்ளிக்கிழமை கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி பக்தா்கள் கமண்டல நாக நதிக்கரையில் இருந்து கரகம் எடுத்து வந்து கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
பின்னா் நடைபெறும் கூழ்வாா்க்கும் திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் கூழ் ஊற்றுவா். வெள்ளிக்கிழமை மாலை நூதன புஷ்ப பல்லக்கு ஊா்வலம் நடைபெறும்.
ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில், விழாக் குழுவைச் சோ்ந்த பி.நடராஜன், சுப்பிரமணி, ஏ.வி.நேமிராஜ், அக்ராபாளையம் குணா, ஏ.எஸ்.ஆா்.சரவணன் செல்வராஜ், ஜி.சங்கா், பையூா் சரவணன், சித்தேரி ஜெகன், இளையராஜா, அக்ராபாளையம் ஏ.இ.சண்முகம், பேராசிரியா் சிவா, வழக்குரைஞா் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.