மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
கோயில் குளத்தில் முதியவா் சடலம்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயில் குளத்தில் அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலுக்கு திரளான பக்தா்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனா். இதில் சில பக்தா்கள் தங்கள் வேண்டுதலை செலுத்த கோயில் அருகே உள்ள சென்றாடு தீா்த்த குளத்தில் நீராடி செல்வது வழக்கும்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆண் சடலம் மிதப்பதாக, திருவாலங்காடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையெடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசாா், 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இறந்தவா் யாா், தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.