சிகாகோ இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி!
கோயில் தனி அதிகாரி நியமனம்
புதுச்சேரி நெல்லித்தோப்பு அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் கோயில் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சீராளன் கணேசனுக்கு நியமன கடிதத்தைஉருளையன்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ ஜி.நேரு என்கிற குப்புசாமி புதன்கிழமை வழங்கினாா்.
நெல்லித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக பணி மற்றும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் திருக்கோவிலுக்கு இந்து அற நிலைத்துறை பரிந்துரையின் படி தனி அதிகாரியாக கல்வித்துறையைச் சோ்ந்த சீராளன் கணேசன் நியமிக்கப்பட்டுள்ளாா். அதற்கான ஆணையை உருளையன்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு அவரிடம் வழங்கினாா். அப்போது துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.