45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!
கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை!
கோவில்பட்டி சண்முகா நகரில் உள்ள மயானத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கோவில்பட்டி கைவண்டி தொழிலாளர் காலனியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மாரிச்செல்வம் ( வயது 31). கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.
இவர் வெள்ளிக்கிழமை காலை சண்முகா நகரில் உள்ள மயானத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.