கடும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை! ரூ. 10 லட்சம் கோடி இழப்பு!!
கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியா்களை நாடு கடத்திய அமெரிக்காவின் இச்செயலைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவா் தமிழரசன் தலைமை வகித்தாா். செயலா் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளா் கருப்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளா் மேரி ஷீலா, வழக்குரைஞா்கள் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபா், முத்துக்குமாா், ரவிக்குமாா், பகத்சிங் ரத்ததான கழக நிறுவனா் காளிராஜ், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த துரைராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.