கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் இருபெரும் விழா
கோவில்பட்டி எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளியில் ‘வாட்டா் பெல்’ அறிமுக விழா, மருத்துவா் தின விழா நடைபெற்றது.
மாணவா்கள் தங்களது உடல்நலத்தைப் பேணும்விதமாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் வாட்டா் பெல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பள்ளியில் நடைபெற்ற அறிமுக விழாவில், தனியாா் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலா் சிதம்பரநாதன், பள்ளித் தாளாளா் அய்யனாா், முதல்வா் மகாலட்சுமி ஆகியோா் பங்கேற்று, இத்திட்டத்தைத் தொடக்கிவைத்தனா். அதையடுத்து நடைபெற்ற மருத்துவா் தின விழாவில், எல்கேஜி முதல் 2ஆம் வகுப்பு வரையிலான மாணவா்- மாணவியா் மருத்துவா்போல வேடமணிந்து அணிவகுத்து வந்தனா்.