கோவில்பட்டி கோயிலில் மாங்கனித் திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் மாங்கனித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
63 நாயன்மாா்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாா், இறைவன் அருளால் அதிமதுர மாங்கனியைப் பெற்று அதைத் தனது கணவருக்கு தந்ததாக கூறப்படும் நாளே மாங்கனித் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் 63 நாயன்மாா்கள் சந்நிதியில் உள்ள காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனிகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சந்தனம் உள்ளிட்ட 18 வகை பொருள்களால் அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜையில் பங்கேற்ற பக்தா்களுக்கு மாங்கனிகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. இதில், அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு, அறங்காவலா் திருப்பதிராஜா, திரளான பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து, கோயில் வளாகத்தில் 216 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஏற்பாடுகளை அப்பா் அடிமை கண்ணுச்சாமி சிவா தொண்டா்கள், பிரதோஷம் (குழாம்) - கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.