செய்திகள் :

கோவில்பட்டி: மர்மமான முறையில் உயிரிழந்த 10 வயது சிறுவன்; துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸார்?

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இதில், இளைய மகன் கருப்பசாமி, கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். அம்மை நோயால் பாதிக்கப்பட்டதால் கடந்த 7-ம் தேதி முதல் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தார். அம்மை நோய் இறங்குவதற்காக அச்சிறுவனின் கழுத்தில் ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலியும், கையில் ஒரு தங்க மோதிரமும் அணிந்து வீட்டில் ஓய்வில் இருந்துள்ளான்.

உயிரிழந்த சிறுவன் கருப்பசாமி

இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி அச்சிறுவனைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக பக்கத்து வீட்டின் மொட்டை மாடியில் மயங்கிய நிலையில் அச்சிறுவன் மீட்கப்பட்டான். சிறுவன் அணிந்திருந்த தங்க நகையை காணவில்லை. மருத்துவ பரிசோதனையில் அச்சிறுவன் உயிரிழந்ததாகவும், உயிரிழந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறினர். 

இதனையடுத்து பக்கத்தில் உள்ள வீடுகளைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 4 பேரிடம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார்  விசாரணை நடத்தினர். இதில் எந்த துப்பும் துலங்காததால் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், மோப்ப நாய் அந்த பகுதியில் உள்ள வீடுகளைச் சுற்றி வந்தும் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. அதிக மூச்சுத்திணறல் காரணமாக சிறுவன் கருப்பசாமி உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியதாக  போலீஸார் கூறியுள்ளனர்.

சிறுவனின் உடல் கிடந்த பக்கத்து வீட்டு மொட்டைமாடி

சிறுவனின் வாய் மற்றும் உதடுப் பகுதிகளில் காயங்கள் தென்படுகிறது. கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் உள்ள செல்போன் அழைப்புகளையும் போலீஸார் கண்காணித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் கள்ளச்சந்தையில் 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் எந்த பலனுமில்லை. சிறுவனின் மர்ம மரண வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் போலீஸார் திணறி வருகின்றனர்.  

`மனைவிக்கு பாடம் கற்பிக்கிறேன்' - பெற்றோர் வீட்டுக்குச் சென்று திரும்பி வராததால் கணவர் விபரீத முடிவு

குஜராத்தில், மனைவிக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று கணவன் தூக்குபோட்டுத் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் அவர் செல்போன் வீடியோ மூலம் தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது. போலீஸாரின் கூற்றுப்படி, பொடாட் ... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள்; பனியன் நிறுவனத்தில் பணி... திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தவர்கள் 6 பேர் கைது!

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர். அதிலும், குறிப்பாக மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ம... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் பழக்கம்; 500 பெண்களிடம் பணம் பறித்த 23 வயது இளைஞர்... பகீர் பின்னணி!

Delhi: டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் துஷார் பிஷ்ட், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துஷார் பிஷ்ட், பிரேசில... மேலும் பார்க்க

Chhattisgarh: முறைகேடுகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சடலமாக கண்டெடுப்பு - என்ன நடந்தது?

சத்தீஸ்கர் மாநிலத்தில், உள்ளூர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய முகேஷ் சந்திரகர் என்ற பத்திரிகையாளர் ஜனவரி 3-ம் தேதி பிஜபூர் மாவட்டத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உடல் சுரேஷ் சந்தி... மேலும் பார்க்க

Anna University: ``சாரிடம் ஞானசேகரன் பேசினார்" - சிறப்பு விசாரணைக் குழுவிடம் உறுதிப்படுத்திய மாணவி

ஞானசேகரன் போனில் பேசியதை சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி கூறியதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமி... மேலும் பார்க்க

விருதுநகரில் போலி சுங்கத்துறை அதிகாரி கைது- மோசடிக்கு வலையா? போலீஸ் விசாரணை

விருதுநகர் தனியார் லாட்ஜில் சுங்கத்துறை அதிகாரி என பொய் சொல்லி ரூம் எடுத்து தங்கியிருந்தவர் கைது செய்யப்பட்டார்.இதுகுறித்து, போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் புல்லலக்க... மேலும் பார்க்க