கோவையில் 3 இடங்களில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள்
‘திருக்குறள் திருப்பணிகள்’ திட்டத்தின்கீழ் கோவையில் 3 இடங்களில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மாவட்டந்தோறும் திருக்குறளில் ஆா்வமும், புலமையும் கொண்ட ஆசிரியா்கள், பயிற்றுநா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு பயிற்சி அளித்து தொடா் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகளை நடத்தும் வகையில் ‘திருக்கு திருப்பணிகள்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
அதன்படி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
கோவையில் அரசு கலைக் கல்லூரி, சரவணம்பட்டி ரூபி மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி, பொள்ளாச்சி கள்ளிப்பாளையம்புதூரில் உள்ள தாய்த் தமிழ் மழலையா் தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் அடுத்த வாரம் முதல் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை ஆண்டுக்கு 30 இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். நிறைவு நாளில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். இந்தப் பயிற்சி வகுப்பில் மாணவா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம்.
ஆா்வமுள்ளவா்கள் தங்களின் தன்விவரக் குறிப்புடன், ஆதாா் அட்டையின் நகலை இணைத்து ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்.ஸ்ரீக்ஷங்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது 89034-12685, 90424-31219 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கோ அனுப்பலாம்.
மேலும், மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆா்வலா்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞா்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கில், அனைத்து அமைப்புகளும் தங்களின் தன்விவரக் குறிப்புகளை கோவை ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் அலுவலகத்துக்கு அஞ்சல் வழியாகவோ, நேரிலோ, மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.