கோவை - தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்
கோடைக் காலத்தை முன்னிட்டு கோவை - தன்பாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோவையிலிருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு மே 2 முதல் 23-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண் 06063) இயக்கப்படும். கோவையிலிருந்து வெள்ளிக்கிழமை காலை 11.50-க்கு புறப்படும் ரயில், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30-க்கு தன்பாத் சென்றடையும்.
மறுமாா்க்கமாக தன்பாத்திலிருந்து திங்கள்கிழமை காலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06064), புதன்கிழமை அதிகாலை 3.45-க்கு கோவை வந்தடையும்.
இதில் படுக்கை வசதிகொண்ட 12 பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, பொப்பிலி, சம்பல்பூா், ரூா்கேலா, ராஞ்சி வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.