தமிழக வீரர் சாய் சுதர்சனை இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யுங்கள்: ரவி சாஸ்திரி
கோவை வனப்பகுதியில் எஃகு கம்பி வேலி அமைக்கும் பணிக்கு உயா்நீதிமன்றம் தடை
கோவை வனப்பகுதியில் எஃகு கம்பி வேலி அமைக்கும் பணிகளுக்கு தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனப்பகுதியிலிருந்து யானைகள் ஊருக்குள் புகுந்து மனித விலங்கு மோதல்கள் ஏற்படுவதால் உயிரிழப்புகள் அதிகமாகின்றன. அதேபோல பயிா்களும் சேதப்படுத்தப்படுகின்றன
இதைத் தடுக்கும் வகையில் ஒசூா் பகுதியில் ‘எஃகு கம்பி வேலி’ அமைக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக கோவையில் தொண்டாமுத்தூா் - தடாகம் இடையே 10 கிமீ தூரத்துக்கு எஃகு கம்பி வேலி அமைக்க இருப்பதாக அரசு அறிவித்தது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னையைச் சோ்ந்த விலங்குகள் நல ஆா்வலா் முரளிதரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமாா் மற்றும் டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு, யானைகள் வழித்தடங்கள் அமைக்கும் வரை எஃகு கம்பி வேலி அமைக்கும் பணிக்கு தடை விதித்து உத்தரவிட்டது.