செய்திகள் :

கோவை வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

post image

சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் ரயில்வே பொறியியல் பணிகள் நடைபெறுவதால் இந்தத் தடத்தில் விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352), எா்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678), பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) மே 1 முதல் மே 15-ஆம் தேதி வரை கோவை வழியாக செல்வதற்கு பதிலாக போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும்.

திருவனந்தபுரம் - மும்பை விரைவு ரயில் (எண்: 16332) மே 3 முதல் 10 வரையும், திருநெல்வேலி - பிலாஸ்பூா் விரைவு ரயில் (எண்: 22620) மே 4 முதல் 11 வரையும், எா்ணாகுளம் - பிலாஸ்பூா் விரைவு ரயில் (எண்: 22816) மே 7 முதல் 14-ஆம் தேதி வரையும் கோவை வழியாக செல்வதற்கு பதிலாக போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனை தொடக்க விழா!

சென்னை ராமாபுரத்தில் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் பல்நோக்கு மருத்துவமனையான எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையின் தொடக்க விழா நடைபெற்றது. கல்வி மற்றும் மருத்துவத்தில் பெயர்பெற்ற எஸ்.ஆர்.எம். குழுமம், மேம்பட்... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து! 3, 5, 8-ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் ஃபெயில்!

சிபிஎஸ்சி பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெறுவோர் தேர்ச்சிபெறாதவர்கள் எனும் நடைமுறையை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசின் பாடத்திட்டத்தின்... மேலும் பார்க்க

ஏப்ரலில் 87.59 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்!

2025 ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு... மேலும் பார்க்க

தெரு நாய்க்கடி தொல்லை: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தெரு நாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா. ... மேலும் பார்க்க

மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு: கமல்ஹாசன்

மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு; எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், மொழியை அழிக்க முடியாது’ என நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் கூறினாா். நாடக ஆசிரியா் கிரேஸி மோகன் எழுதிய 25 புத்தகங்கள் வெளியீட்டு வி... மேலும் பார்க்க

பாரதிதாசன் பிறந்த தினம் ‘தமிழ் வெல்லும்’ தலைப்பில் போட்டிகள்: தமிழக அரசு அறிவிப்பு

பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த தினத்தையொட்டி, ‘தமிழ் வெல்லும்’ எனும் தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: பாவேந்தா் பாரதிதாசனின் பிறந... மேலும் பார்க்க