செய்திகள் :

கோவை: 25 அடி கிணற்றில் தவறி விழுந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழப்பு

post image

கோவை மாவட்டத்தில் கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் ஏராளமான யானைகள் உள்ளன. அவை உணவுக்காக காடுகளில் இருந்து வெளியேறி விவசாய தோட்டங்களுக்கு வருவது வழக்கம்.

யானை

அப்போது யானை – மனித முரண்கள் அதிகளவு நடக்கின்றன. இதன் காரணமாக யானைகள், மனிதர்கள் இருவருமே பாதிக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் அருகே உள்ள சோலைப்படுகை பகுதியில் நிர்மலா என்பவரின் தோட்டத்துக்கு இன்று அதிகாலை 3 மணியளவில் சாடிவயல் ஒரு ஆண் யானை சென்றுள்ளது. சிறிது நேரத்தில் எதிர்பாராத விதமாக யானை அங்கிருந்த 25 அடி கிணறில் தவறி விழுந்துள்ளது.

யானை

யானையின் பிளறல் சத்தம் கேட்டு, வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, யானை ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

ஜேசிபி உதவியுடன் யானையின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “உயிரிழந்த யானைக்கு சுமார் 35 வயது இருக்கும். அந்த யானையுடன் சேர்த்து மொத்தம் 3 யானைகள் இந்தப் பகுதியில் சுற்றி வந்தன. இன்று அதிகாலையும் 3 யானைகள் ஒன்றாகவே இருந்தன.

யானை

மற்ற 2 யானைகள் காட்டுக்குள் செல்ல ஒரு ஆண் யானை மட்டும் தோட்டத்திலேயே இருந்துள்ளது. அந்த யானை காட்டுக்கு செல்லும்போது தான் சம்பவம் நடைபெற்றுள்ளது.” என்றனர்.

``உலகின் மிகச்சிறிய பாம்பு; 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது..'' - சூழலியல் நிபுணர்கள் சொல்வதென்ன?

உலகின் மிகச் சிறிய பாம்பாக அறியப்படும் பார்படோஸ் த்ரெட் பாம்பை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது. இந்தப் பாம்பு இழை போன்ற மெல்லியதாக இருக்குமாம், அதன் முழு வளர்ச்... மேலும் பார்க்க

Nilgiris: மழையால் பசுமை; மகிழ்ச்சியோடு பசியாறும் யானை கூட்டங்கள்.. கவர்ந்திழுக்கும் நீலகிரி மலை!

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாகவும், அதிக எண்ணிக்கையிலான யானைகளின் புகலிடமாகவும் விளங்கி வருகிறது நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டம். பெருந்தோட்ட நிறுவனங்களின் பெயரால் கடந்த 200 ஆ... மேலும் பார்க்க

வத்சலா: 100 வயதைக் கடந்த ஆசியாவின் மூத்த யானை; முழு மரியாதையுடன் தகனம்.. நெகிழவைக்கும் கதை!

ஆசியாவின் அதி மூத்த யானை என்று கருதப்பட்ட 100 வயதைக் கடந்த வத்சலா யானை மத்திய பிரதேச மாநிலத்தில் உயிர் நீத்தது. பன்னா புலிகள் சரணாலயத்தில் வாழ்ந்து வந்த வத்சலா, வெறும் யானை மட்டுமல்ல காட்டின் அமைதியைக... மேலும் பார்க்க