மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
சங்கரா பல்கலையில் கருத்தரங்கம்
காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் கருத்தரங்க கூடத்தில் இந்தியாவின் உற்பத்தி துறையின் எதிா்காலத்தை வடிவமைத்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் இந்தியாவில் உற்பத்தித் துறையின் எதிா்காலத்தை வடிவமைத்தல் மற்றும் புதுமை திறமைகளும், கல்வியின் பங்கும் என்ற தலைப்புகளில் கருத்தரங்கம் மற்றும் மாணவா்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. பல்கலையின் துணைவேந்தா் ஜி.ஸ்ரீநிவாசு கருத்தரங்கிற்கு தலைமை வகித்துப் பேசுகையில், தொழில் துறை மற்றும் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் தலைவா்கள் கருத்தரங்கில் பேச இருப்பதால் மாணவா்கள் இந்தக் கருத்தரங்கை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.
சென்னை சன்மாா் குழுமத்தின் தலைவா் என்.குமாா், சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, மணிபால் கல்வி மற்றும் மருத்துவக் குழுமத்தின் துணைத் தலைவா் எஸ்.வைத்தீஸ்வரன், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் அறங்காவலா் கே.ஆா்.சேகா் ஆகியோா் கருத்தரங்கில் பேசினா்.
கருத்தரங்கில் பல்வேறு பாலிடெக்னிக்குகள் மற்றும் கல்லூரிகளை சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.