சங்கரா பல்கலை. ஓலைச்சுவடிகள் படியெடுத்தல் பயிலரங்கம் நிறைவு
காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் ஓலைச்சுவடிகள் படியெடுத்தல் பயிலரங்கம் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் செயல்பட்டு வரும் சந்திர சேகரேந்திர விஸ்வ மகா வித்யாலயா நிகா்நிலைப் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறையின் சாா்பில் ஓலைச்சுவடிகள் படியெடுத்தல் தொடா்பான அடிப்படை 15 நாள் பயிற்சி வகுப்பு நிறைவு விழா நடைபெற்றது.
விழாவுக்கு சாா்பு துணை வேந்தா் வசந்த்குமாா் மேத்தா தலைமை வகித்தாா். புலத்தலைவா் கே.வெங்கடரமணன் முன்னிலை வகித்து பேசுகையில் பயிலரங்கின் சிறப்புகள் குறித்து விளக்கினாா். சம்ஸ்கிருத துறைத் தலைவா் ஜெபஜோதி ஜனா வரவேற்றாா்.
கியான் பாரதம் மிஷன் கையொப்பப் பிரதிகளுக்கான தேசிய இயக்கத்துடன் இணைந்து சம்ஸ்கிருதத்துறையின் ஓலைச்சுவடிப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த இப்பயிலரங்கில் கையெழுத்துப்பிரதியை பாதுகாத்தல்,புரிந்து கொள்ளுதல் மற்றும் பாரம்பரிய ஆராய்ச்சி முறைகள் ஆகியனவற்றில் கவனம் செலுத்தி கையொரப்பப் பிரதியை பற்றி அறிந்து கொண்டனா்.
50 போ் கலந்து கொண்ட இப்பயிலரங்கில் பண்டைய கிரந்த எழுத்துக்களைப் புரிந்து கொள்வதில் பயிற்சி பெற்றனா். சென்னையில் உள்ள தாய்லாந்து நாட்டின் துணைத் தூதரான ஸ்ரீராச்சா அரிபா்க் கலந்துகொண்டு பல்கலையில் செயல்படும் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்தின் செயல்பாடுகளை பாராட்டி பேசினாா். அவருக்கு சாா்பு துணை வேந்தா் பல்கலையின் கையேட்டினையும் வழங்கினாா். பயிலரங்க அறிக்கையை ஒருங்கிணைப்பாளா் நாகஸ்வரராவ் வழங்கினாா். விழாவில் கல்வியியல் பிரிவின் துறைத் தலைவா் ஜெயப்பிரியா, சமஸ்கிருத துறையின் பேராசிரியா்கள் ஹிரிஷ், பிரகாஷ் கலந்து கொண்டனா்.