செய்திகள் :

`சட்டம் ஆண்களையும் பாதுகாக்க வேண்டும்’ - மனைவி குறித்து வீடியோ வெளியிட்டு TCS ஊழியர் விபரீத முடிவு

post image

மனைவியின் துன்புறுத்தலால் கணவன் தற்கொலை செய்து கொள்வது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. சமீபத்தில் பெங்களூருவில் அதுல் சுபாஷ் என்ற எஞ்சினியர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்போது அது போன்று மேலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த மாணவ் சர்மா(25) என்பவர் கடந்த மாதம் 24ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மும்பையில் டி.சி.எஸ். நிறுவனத்தில் எஞ்சினியராக பணியாற்றும் சர்மா தற்கொலை செய்து நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் சர்மா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது மொபைல் போனில் வீடியோ ஒன்றை பேசி வைத்திருந்தது இப்போது தெரிய வந்துள்ளது.

7 நிமிட வீடியோவை சர்மாவின் சகோதரி இப்போது கண்டுபிடித்துள்ளார். தூக்கு கயிற்றில் தலையை வைத்துக்கொண்டு அந்த வீடியோ பேசப்பட்டுள்ளது. அதில், சட்டம் ஆண்களையும் பாதுகாக்கவேண்டும். அப்படி செய்யாவிட்டால், ஆண்களே இல்லாத காலம் வரும். எனது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தார். ஆனால் நான் என்ன செய்ய முடியும். நான் இறப்பதைப்பற்றி கவலைப்படவில்லை. நான் சாகப்போகிறேன். ஆனால் ஆண்களை பற்றியும் சிந்தியுங்கள். யாராவது ஆண்களைப்பற்றியும் பேசவேண்டும். அவர்கள் தனிமையாகி விடுகிறார்கள். நான் போன பிறகு அனைத்தும் சரியாகிவிடும். இதற்கு முன்பும் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறேன்'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானவுடன் சர்மாவின் மனைவி நிகிதாவும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், `தற்கொலை செய்த தினத்தில் என்னை எனது பெற்றோர் வீட்டில் கொண்டு வந்துவிட்டு சென்றார். என்னைப்பற்றி அவர் வீடியோவில் தெரிவித்து இருப்பவை அனைத்தும் மிகவும் பழையது. திருமணத்திற்கு பிறகு உள்ளது கிடையாது. இதற்கு முன்பும் அவர் பல முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை நானே மூன்று முறை காப்பாற்றி இருக்கிறேன். மது அருந்திவிட்டு வந்து என்னை அடித்து உதைத்திருக்கிறார். இது குறித்து அவரின் பெற்றோரிடமும் தெரிவித்து இருக்கிறேன். இது கணவன் மனைவி பிரச்னை என்று கூறி அவர்கள் எதுவும் செய்யவில்லை. அவரது சகோதரியிடமும் இது குறித்து தெரிவித்து இருக்கிறேன்''என்று தெரிவித்துள்ளார்.

தற்கொலை தடுப்பு மையம்

அந்த வீடியோவை வைத்து, சர்மாவின் சகோதரி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் நிகிதா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ``பிரேத பரிசோதனையின் போது எந்த விதபுகாரும் வரவில்லை. வீடியோ வந்த பிறகு நிகிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகிதா தன் மீதான புகார் பொய்யானது என்று தெரிவித்துள்ளார். இரண்டையும் விசாரித்து வருகிறோம்''என்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

பற்றி எரிவது அடுத்தவர் வீட்டுக்கூரைதானே என்று ஆசுவாசமாக இருந்தீர்களென்றால்... | Must Read

அடுத்தவரின் துன்பத்தைக்கண்டு நகைக்கிற இயல்பு நம் மனங்களுக்குள் எப்போது நுழைந்தது..? பாதிக்கப்பட்டவர்களின் ரணம் ஆறுமுன், 'நான் எவ்ளோ பெரிய நியாயக்காரன் தெரியுமா' என்பதை நிரூபிக்கிற அளவுக்கு இதயம் கல்லா... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: `தொகுதி மறுசீரமைப்பு சர்ச்சை டு சாம்பியன்ஸ் டிராபி' - இந்த வார கேள்விகள் இதோ..!

மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, மகா கும்பமேளா, ரஷ்யா - உக்ரைன் போர் மூன்றாண்டுகள் நிறைவு, சாம்பியன்ஸ் டிராபி தொடர் என இந்த வார சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இ... மேலும் பார்க்க

புனே பாலியல் வழக்கு: சிக்க வைத்த ஒரு கிளாஸ் தண்ணீர்; களமிறங்கிய கிராமம்; குற்றவாளி சிக்கியது எப்படி?

புனேயில் கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலையில் பேருந்திற்கு டெப்போவில் காத்து நின்ற மருத்துவமனை பெண் ஊழியர் பேருந்திற்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்பெண்ணிடம் தத்தாத்ரேயா ராமதாஸ் என்பவர... மேலும் பார்க்க

`எதுவுமே செய்யாமல் நாளொன்றுக்கு ரூ.35 லட்சம் வருமானம் ' - சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்ஸர் சொல்வெதென்ன?

சீனாவைச் சேர்ந்த சோசியல் மீடியா இன்ஃப்ளேன்ஸர் ஒருவர், தான் சும்மா படுத்துக்கொண்டு வருமானம் ஈட்டுவதாக வெளிப்படையாகக் கூறியதையடுத்து, கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். ஒரே நாளில் இவர் இந்திய மதி... மேலும் பார்க்க

சீனா - தைவான் விவகாரம் : `நான் கருத்து தெரிவிக்க மாட்டேன்' - நழுவிய ட்ரம்ப்

ரஷ்யாவிடமிருந்து (சோவியத் யூனியன்) பிரிந்து சென்ற உக்ரைன் போல சீனாவிடமிருந்து பிரிந்து சென்றது தைவான். ஆனால், இன்றளவும் உக்ரைனை ரஷ்யா சொந்தம் கொண்டாடுவதுபோல தைவனை சீனா சொந்தம்கொண்டாடுகிறது. இந்த விவகா... மேலும் பார்க்க

திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும்; இல்லைன்னா பணிநீக்கம் - சர்ச்சை கண்டிஷனை திரும்ப பெற்ற நிறுவனம்

டிசம்பர் மாதத்துக்குள் திருமணம் ஆகாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக கூறிய ஒரு சீன நிறுவனம், அந்த ரூல்ஸை திரும்ப பெற்றதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஷாண்டாங்கில் உள்ள `ஷு... மேலும் பார்க்க