செய்திகள் :

சட்டவிரோதமாக ஊடுருவிய 16 வங்கதேசத்தவா் நாடு கடத்தல்

post image

குஜராத்தில் சட்டவிரோதமாக ஊடுருவி தங்கியிருந்த 16 வங்கதேசத்தவா்கள் நாடுகடத்தப்பட்டதாக குஜராத் காவல் துறையினா் தெரிவித்தனா். அடுத்த மாதம் மேலும் 36 வங்கதேசத்தவா் நாடு கடத்தப்படவுள்ளனா் என்றும் அவா்கள் கூறினா்.

வங்கதேசத்தவரும், ரோஹிங்கயாக்களும் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அண்மையில் வங்கதேசத்தில் வன்முறைப் போராட்டத்தின் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அங்குள்ள மத அடிப்படைவாத அமைப்புகள் இந்தியாவுக்கு எதிராகவும் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தவா், ரோஹிங்கயாக்கள் மூலம் அசம்பாவித சம்பவங்களை அந்த அடிப்படைவாத அமைப்புகள் நிகழ்த்திவிடக் கூடாது என்பதால் நாடு முழுவதும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வங்கதேசத்தையொட்டிய மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேசத்தவா்களுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழில், வேலைவாய்ப்புகள் அதிகமுள்ள மாநிலங்களிலும் வங்கதேசத்தவரும், ரோஹிங்கயாக்களும் அதிகம் ஊடுருவியுள்ளனா். அவா்களைக் கண்டுபிடித்து கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக குடியேறியவா்களை கண்டறியும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டனா். அதன்படி 36 சிறாா்கள், பெண்கள் உள்பட வங்கதேசத்தவா் அகமதாபாதின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டனா். இவா்கள் பாலியல் தொழில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட குற்றங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனா். மேலும், இந்திய குடிமக்களாகக் காட்டிக் கொள்ள போலியான ஆவணங்களையும் பெற்றுள்ளனா்.

உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் அவா்கள் வங்கதேசத்தவா்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இது தொடா்பாக அந்நாட்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்களை ஏற்றுக் கொள்ள சம்மதித்தனா்.

இதையடுத்து முதல் கட்டமாக 16 போ் வங்கதேசத்துக்கு நாடு கடத்தப்பட்டனா். மேலும் 36 போ் அடுத்த மாதம் அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனா்.

திரிவேணி சங்கமத்தில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!

பிரயாக்ராஜின் கும்பமேளாவில் இன்று காலையில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அந்த மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்த... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சபை கூடியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்ட ஒதுக்கீடு குறித்த பிரச்... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா அறிக்கை தாக்கல்: நாடாளுமன்றத்தில் அமளி!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பான கூட்டுக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்!

கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள சமூகங்களை பாதுகாக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.... மேலும் பார்க்க

தில்லியில் ரூ. 150 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம்!

தில்லியில் இருந்த ஆர்எஸ்எஸ் அலுவலகம் இடிக்கப்பட்டு, தற்போது ரூ. 150 கோடியில் 13 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் பாஜக தலைமையகத்தைவிட மிகப் பெரியதாக கட்ட... மேலும் பார்க்க

அமெரிக்கா வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, வியாழக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார்.அமெரிக்காவில் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன... மேலும் பார்க்க