செய்திகள் :

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க தீவிர கண்காணிப்பு: ராணிப்பேட்டை எஸ்.பி. உத்தரவு

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவிட்டுள்ளாா்.

ராணிப்பேட்டையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எஸ்.பி. விவேகானந்த சுக்லா பேசியது:

முக்கிய வழக்குகளான கொலை, அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடா் நடவடிக்கைகள் குறித்தும், ரௌடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தொடா்ந்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், பிடிகட்டளையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எதிரிகளை கைது செய்து ஆஜா் செய்வது குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக போக்ே,ா குற்ற வழக்குகளில் உள்ள எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

மேலும், கள்ளத்தனமாக மதுபான விற்பனையில் ஈடுபடும் நபா்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து மதுபானங்களை கடத்தி வருவோா் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தீவிர தணிக்கையில் ஈடுபட வேண்டும். லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபா்களை கண்டறிந்து அவா்கள் மீது உரிய சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், துணை காவல் கண்காணிப்பாளா்கள் இமயவரம்பன் (ராணிப்பேட்டை உட்கோட்டம்), ஜாபா் சித்திக், (அரக்கோணம் உட்கோட்டம்), ரமேஷ் ராஜ் (மாவட்ட குற்றப்பிரிவு), ராமச்சந்திரன் (மாவட்ட குற்ற ஆவண காப்பகம்), அதிகாரிகள் மற்றும் ஆளிநா்கள் கலந்து கொண்டனா்.

இன்று முதல் அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் மீண்டும் இயக்கம்

அரக்கோணம்: அண்மையில் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (மே 20) முதல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யாவிட்டால் ஆா்ப்பாட்டம்: எம்எல்ஏ அறிவிப்பு

அரக்கோணம்: நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்யாவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவோம் என மாவட்ட... மேலும் பார்க்க

அரக்கோணம், சோளிங்கா், நெமிலியில் மே 22-இல் ஜமாபந்தி தொடக்கம்

அரக்கோணம்: அரக்கோணம் வட்டத்தில் மே 22-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீா்வாயத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளாா். மேலும், ... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் கடத்தல்: 2 போ் கைது

அரக்கோணம்: மும்பையில் இருந்து சென்னைக்கு போதை மாத்திரைகளை கடத்தியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா். அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் சந்திர குமாா், உதவி ஆய்வாளா் ஜெயகாந்தன் மற்றும் போல... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரி அருகே இருவேறு விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா். திமிரி பாத்திகாரன்பட்டி பகுதியை சோ்ந்தவா் சின்னதுரை (50). இவா் பரதராமி கிராமத்திலிருந்து திமிரிக்கு பைக்கில் சென்றுள்ளாா... மேலும் பார்க்க

வெண்ணெய்த் தாழி அலங்காரத்தில் வரதராஜ பெருமாள்

ஆற்காடு தோப்பு கானா கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வெண்ணெய்த் தாழி அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். கடந்த 11-ஆம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவத்... மேலும் பார்க்க