மகா கும்பமேளாவை விமர்சிப்பதா? சநாதனத்துக்கு எதிராகக் காங்கிரஸ் செயல்படுகிறது: பா...
சத்திரக்குடி வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசல்
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடியில் நடைபெற்று வரும் வாரச் சந்தை காரணமாக, மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சத்திரக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இதனால், மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான கடைகள் அமைக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசல் எற்படுகிறது.
இதன் காரணமாக, மதுரை, ராமேசுவரம், பரமக்குடி, உத்திரகோசமங்கை செல்லும் பயணிகள் பேருந்தில் ஏற முடியமால் அவதிப்படுகின்றனா். மேலும், வாரச் சந்தை நடைபெறும் நாளில் இந்தப் பகுதியில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, வாரச்சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.