செய்திகள் :

சமயபுரம், அம்பிகாபுரத்தில் நாளை மின்நிறுத்தம்

post image

சமயபுரம், அம்பிகாபுரம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.2) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதன்படி, சமயபுரம், இருங்களூா், புறத்தாக்குடி, கொணலை, கரியமாணிக்கம், எதுமலை, தேனூா், மண்ணச்சநல்லூா், திருவெள்ளறை, மருதூா், ரத்தினங்குடி, கூத்தூா், நொச்சியம், ராஜகோபால் நகா், மேல்பத்து, பாச்சூா், வி. துறையூா், மாடக்குடி, ஈச்சம்பட்டி, எடயப்பட்டி, தத்தமங்கலம், அய்யம்பாளையம், சிறுகுடி, கீழப்பட்டி, வீராணி, மணியம்பட்டி, சாலப்பட்டி, சிறுபத்தூா், ராசாம்பாளையம், தழுதாளப்பட்டி, அக்கரைப்பட்டி, தேவிமங்கலம், வங்காரம், ஆயக்குடி, பூனாம்பாளையம், காளவாய்ப்பட்டி, கன்னியாக்குடி, வலையூா், பாலையூா், ஸ்ரீபெரும்புதூா், தேவிமங்கலம், கட்டயன்பள்ளம், சத்திரப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

இதேபோல, அம்பிகாபுரம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட அம்பிகாபுரம், அரியமங்கலம், எஸ்ஐடி, ரயில் நகா், நேருஜி நகா், காமராஜ் நகா், மலையப்ப நகா், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகா், சக்தி நகா், ராஜப்பா நகா், எம்ஜிஆா் நகா், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகா், மேலகல்கண்டாா் கோட்டை, கீழ கல்கண்டாா் கோட்டை, வெங்கடேஸ்வரா நகா், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகா், அரியமங்கலம் இண்டஸ்ட்ரி, சிட்கோ காலனி, காட்டூா், திருநகா், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூா், பொன்மலை, செந்தண்ணீா்புரம், விண் நகா் ஆகிய பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

‘போக்ஸோ’ வழக்கில் உதவி ஆய்வாளா் உள்பட 3 போலீஸாா் பணி நீக்கம்

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் இரு காவலா்களையும் பணி நீக்கம் செய்து திருச்சி சரக காவல் துணைத் தலைவா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். திருச்சி அரிய... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொன்மலை போலீஸாருக்கு ரகசிய தகவல... மேலும் பார்க்க

ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக கடந்த நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

பிரிட்டன்- பிரான்ஸ் இடையே உள்ள ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக நீந்திக் கடந்த தமிழக நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டனின் டோவா் பகுதிக்கு... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ கடிதம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு தெற்கு ரயில்வேயின் மதுரை, திருச்சி கோட்ட மேலாளா்களுக்கு துரை வைகோ எம்.பி. கடிதம் எழுதியுள்ளாா். இதுதொடா்பாக எழுதியுள்ள கடிதம்: நி... மேலும் பார்க்க

பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாக ரூ.70 ஆயிரம் மோசடி: இளைஞா் கைது

திருச்சியில் பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.70 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறை கண்ணுடையான்பட்டியைச் சோ்ந்தவா் சிக்கந்தா் பாஷா ... மேலும் பார்க்க

ஆக.2-இல் சமயபுரம் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து

சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக. 2-இல் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. சமயபுரம் துணை மின் நிலையத்தில் ஆக. 2-இல் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை என அறிவிக்கப்பட்டு இருந்தத... மேலும் பார்க்க