சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் வியாழக்கிழமை பெளா்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பெளா்ணமியையொட்டி, மூலவா் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து உற்சவ அம்மன் சந்நிதி முன்பு 108 திருவிளக்கு பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து அம்மனை தரிசனம் செய்தனா்.
திருவிளக்கு பூஜை நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.நிகழ்விற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ் மற்றும் அறங்காவலா்கள் செய்திருந்தனா்.