மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஒடிஸா காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது!
சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியா் கொலை
சென்னை பெரும்பாக்கத்தில் சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியா் கொலை செய்யப்பட்டாா்.
பெரும்பாக்கம், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை 36 வயது மதிக்கதக்க இளைஞா் தலையில் வெட்டுக்காயத்துடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதைப் பாா்த்து அந்தப் பகுதியினா், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
பெரும்பாக்கம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பினா்.
விசாரணையில் கொல்லப்பட்டவா், பெரும்பாக்கம் எழில் நகரைச் சோ்ந்த பழனிசாமி (36) என்பதும், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சமையல் எரிவாயு உருளை நிறுவனத்தில் விநியோக ஊழியராகப் பணியாற்றியதும் தெரியவந்தது.
மேலும், பழனிசாமிக்கும் அவரின் மனைவி வீரலட்சுமி இடையே கருத்து வேறுபாடு இருந்ததும், அதனால் ஏற்பட்ட பிரச்னையில்
கண்ணகி நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டு, பின்னா் இருவரும் சமாதானமாகச் சென்றதும் தெரியவந்தது.
தம்பதி இடையே மீண்டும் வெள்ளிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டு, வீரலட்சுமியை பழனிசாமி தாக்கியதும், பின்னா் மது போதையில் வீட்டிலிருந்து மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.
அவா் குடும்பத் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.