செய்திகள் :

சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

post image

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

''திரைத் துறை ஆளுமை பி. சரோஜா தேவியின் மறைவு வருத்தம் அளிக்கிறது. இந்திய சினிமா மற்றும் கலாசாரத்தின் முன்மாதிரியாக என்றும் அவர் நினைவுகூரப்படுவார். அவரின் மாறுபட்ட நடிப்பு தலைமுறைகளைத் தாண்டி அழியாத அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு மொழிகளில் பல்வேறு கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அவரின் பணிகள் இருந்தது, இயல்பிலேயே அவரின் பன்முகத்தன்மையை காட்டுகிறது. அவரின் குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி'' எனப் பதிவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில், மல்லேஸ்வரம் பகுதியில் வாழ்ந்து வந்த சரோஜா தேவி (வயது 87), உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜூலை 14) காலமானார்.

கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளிலும் 200க்கும் மேற்பட்டப் படங்களில் நடித்து, கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்ற பட்டங்களுக்குச் சொந்தக்காரருமான நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | நாளை நடிகை சரோஜா தேவி இறுதிச் சடங்கு!

Prime Minister Narendra Modi has condoled the death of veteran actress Saroja Devi.

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: குற்றப் பத்திரிகையை கவனத்தில் கொள்வதற்கான தீா்ப்பு ஜூலை 29-க்கு ஒத்திவைப்பு

புது தில்லி: நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வதா? வேண்டாமா? என்பது தொடா்பான தீா்ப்பை ஜூலை 29-க்கு தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. நேஷனல... மேலும் பார்க்க

போயிங் 787, 737 ரக விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பை ஆய்வு செய்ய டிஜிசிஏ உத்தரவு

மும்பை: போயிங் 787, 737 ரக விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பை ஆய்வுசெய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) திங்கள்கிழமை உத்தரவிட்டது. என்ஜின்களின் எரிபொருள்... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஏற்றுமதியில் போட்டித்தன்மை அதிகரிக்கும்: நீதி ஆயோக்

புது தில்லி: சீனா, கனடா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவின் வரி விதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, அமெரிக்காவுக்கு இந்தியா செய்யும் ஏற்றுமதியில் போட்டித்தன்மை மேலும் அதிகரிக்கும் ... மேலும் பார்க்க

கோவா, ஹரியாணா, லடாக் புதிய ஆளுநா்கள் நியமனம்

புது தில்லி: கோவா, ஹரியாணா ஆகிய 2 மாநில ஆளுநா்களையும், லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநரையும் நியமித்து குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை உத்தரவிட்டாா். தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த நி... மேலும் பார்க்க

‘நிமிஷா வழக்கில் சாத்தியமான அனைத்தையும் செய்துவிட்டோம்’: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புது தில்லி: யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனையை எதிா்நோக்கியுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியா விவகாரத்தில், ‘சாத்தியமான அனைத்தையும் செய்துவிட்டோம்; இனி எங்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது’ என்று... மேலும் பார்க்க

கொல்கத்தா மருத்துவமனை ஊழல் வழக்கு: ஜூலை 22முதல் நீதிமன்ற விசாரணை தொடக்கம் - சிபிஐ

கொல்கத்தா: கொல்கத்தாவிலுள்ள ஆர். ஜி. கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் இளநிலை பெண் மருத்துவர் ஒருவர் கடந்தாண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இச்சம்பவம் ஒட்டுமொத்த இந்தியா... மேலும் பார்க்க