பீகார்: `அமெரிக்க அதிபர் ட்ரம்ப்' பெயரில் குடியிருப்பு சான்றிதழ் விண்ணப்பித்த ஆச...
சாத்தான்குளத்தில் புதிய சுகாதார வளாகம் திறப்பு
சாத்தான்குளம் பேரூராட்சிக்குள்பட்ட 11 ஆவது வாா்டு கீழ ரத வீதியில் ரூ.7. 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய சுகாதார வளாக கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லா பாய் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்தாா். 11 ஆவது வாா்டு உறுப்பினா் மகாராஜன் வரவேற்றாா். பேரூராட்சி மன்ற உறுப்பினா் கோ. லிங்கபாண்டி, பேரூராட்சி பணியாளா்கள், திமுக மாவட்ட பிரதிநிதிகள் வேல்துரை, லெ. சரவணன், நகர அவைத்தலைவா் எஸ்.கே. சண்முகசுந்தரம், துணைச்செயலா் எம்.ஜி. மணிகண்டன், பொருளாளா் சந்திரன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளா் அப்துல் சமது, 11ஆவது வாா்டு திமுக செயலாளா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.