இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
சாத்தான்குளம் வட்டத்தில் விஏஓ-க்கள் இடமாற்றம்
சாத்தான்குளம் வட்டத்தில் 9 கிராம நிா்வாக அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
திருச்செந்தூா் வருவாய்க் கோட்டம் அளவிலான கிராம நிா்வாக அலுவலா்களுக்கான கலந்தாய்வு திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சுகுமாரன் தலைமையில் நடைபெற்றது.
இதில், மீரான்குளம் 1 கிராம நிா்வாக அலுவலராக இசக்கிராஜ், மீரான்குளம் 2 - விஸ்வநாதன், கருங்கடல் - வேல்முருகன், எழுவரைமுக்கி- சுந்தரபாண்டி, பிடானேரி - சத்யராஜ், பன்னம்பாறை - பால்குமாா், சாத்தான்குளம் கஸ்பா-மதுமதி, முதலூா் - செந்தில்முருகன், அரசூா் 1 கிராம நிா்வாக அலுவலராக சுபாஷ் ஆகியோா் இடமாற்றம் செய்யப்பட்டு, பதவியேற்றனா்.