செய்திகள் :

சாத்தான் குளம் தந்தை - மகன் வழக்கு: உண்மையைக் கூறுவதாக கைதான காவலர் மனு!

post image

சாத்தான் குளம் காவல் நிலையத்தில் தந்தை - மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடந்த உண்மைகளைக் கூறுவதாக கைதான காவல் துறை அதிகாரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனுவை தாக்கல் செய்து, தந்தை - மகன் கொலை வழக்கில் உண்மையைச் சொல்கிறேன் என அப்ரூவராக மாறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கரோனா ஊரடங்கின்போது கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரை காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

விசாரணையின்போது அவர்கள் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இச்சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், உண்மை தன்மையைக் கண்டறிய மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி 2 ஆயிரம் பக்கம் குற்றப் பத்திரிகையையும் சிபிஐ தாக்கல் செய்தது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த வழக்கில் நடந்த உண்மைகளை மறைக்காமல் கூறுவதாகவும், மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தை - மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நினைப்பதால், காவலர்கள் செய்த குற்றங்களைக் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நீண்டுகொண்டே வந்த இந்த வழக்கில், இது புதிய திருப்பமாக அமைந்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்... மேலும் பார்க்க

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு நெஞ்சுவலி!

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவ... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து மக்களுடன் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில்,... மேலும் பார்க்க

முதல்வர் எப்போது வீடு திரும்புவார்? - மு.க. அழகிரி பேட்டி

முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமாக இருக்கிறார், அடுத்த 2 அல்லது 3 நாள்களில் வீடு திரும்புவார் என்று அவரது சகோதரர் மு.க. அழகிரி கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது லே... மேலும் பார்க்க

தருமபுரி அருகே வீட்டின் மீது மோதிய அரசுப் பேருந்து: சிறுமி பலி

தருமபுரி: தருமபுரி மாவட்டம் உழவன்கொட்டாய் பகுதியில், சாலையோரம் இருந்த வீட்டின் மீது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிறுமி பலியானார்.தருமபுரியின் கிராமப்... மேலும் பார்க்க

அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான்! - டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அமையும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி உருவாகியுள்ளது.... மேலும் பார்க்க