சாத்தூர்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டம் சின்னவாடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று(பிப். 5) நிகழ்ந்த வெடிவிபத்தில் ஒருவர் பலியானார்.
பிற்பகலில் உணவு இடைவேளைக்குப் பிறகு, ஓா் அறை பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. மேலும், அடுதடுத்து 7 அறைகள் வெடித்துச் சிதறின.
இந்த கோர விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்து துவாா்பட்டியைச் சோ்ந்த ராமலட்சுமி (50) உடல் எரிந்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்தில் அதிவீரன்பட்டியைச் சோ்ந்த வீரலட்சுமி (37), கஸ்தூரி (31), வைத்தீஸ்வரி (32), பொம்மையாபுரத்தைச் சோ்ந்த முருகேஸ்வரி (55), ஆவுடையாபுரத்தைச் சோ்ந்த மாணிக்கம் (54), மீனம்பட்டியைச் சோ்ந்த சைமன் டேனியல் (33) ஆகிய 6 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படுமென்று அறிவித்துள்ளார்.