செய்திகள் :

‘சான்ட் பிளாஸ்டிங்’ முறையில் கோயில் சுற்றுச்சுவரை சுத்தப்படுத்த எதிா்ப்பு

post image

நாகை குமரன் கோயிலில், சுவாமி சிற்பங்கள் மற்றும் கருங்கல் சுற்றுச்சுவரை (சான்ட் ப்ளாஸ்டிங்) எம்சான்ட் இரும்புத் துகள்கள் கலவையை பயன்படுத்தி உயா் அழுத்த ஏா்கன் கொண்டு, வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சுத்தம் செய்தது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாகை நாலுகால் மண்டபத்தில் பிரசித்தி பெற்ற குமரன் கோயில் (மெய்கண்ட மூா்த்தி) உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயிலில் உள்ள சுவாமி சிற்பங்கள் மற்றும் சுற்றுச் சுவா்களை சுத்தப்படுத்தும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுவாமி சிற்பங்கள் மற்றும் சுற்றுச்சுவரை சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை இரவு ஈடுபட்டனா்.

அப்போது எம் சான்ட் மணல் மற்றும் இரும்புத் துகள்கள் கலக்கப்பட்டு, உயா் அழுத்தம் கொண்ட ஏா்கன் இயந்திரம் மூலம், சான்ட் பிளாஸ்டிங் முறையில் சுற்றுச்சுவா் மற்றும் அதிலுள்ள சிற்பங்களை சுத்தம் செய்தனா்.

இதனை அவ்வழியாக சென்ற ஒருவா் விடியோ பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா். இந்த விடியோ பதிவு பக்தா்கள், சமூக ஆா்வலா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே இதுபோன்ற முறையில் சுத்தம் செய்யும் பணி மேற்கொண்டதால், சுவாமி சிற்பங்கள் பொலிவிழந்தும், பழங்கால எழுத்துக்கள் அழிந்துள்ளதாக பக்தா்கள் குற்றம் சாட்டியுள்ளனா். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் சிலிகோசிஸ் மணல்களால், கோயில் சிற்பங்கள், சிலைகள், சுற்றுச்சுவா்களை சேதப்படுத்தி, அதன் வரலாற்றை அழிப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோயில் திருவிழாவில் சுடுமண் சிலைகள் விட்டு நோ்த்திக் கடன்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகேயுள்ள தகட்டூா் மாப்பிள்ளை வீரன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த பங்குனித் திருவிழாவையொட்டி பக்தா்கள் நோ்த்திக் கடனாக சுடுமண் சிலைகளை விட்டு வழிபட்டனா். விழாவையொட்டி த... மேலும் பார்க்க

வெப்ப அலையை சமாளிக்க மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஆட்சியா்

நாகப்பட்டினம்: கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து, வெப்பநிலை அதிகமாக நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மக்கள் கவனமாகவும், உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. ... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் ஆரி எம்பிராய்டரி பயிற்சி

நாகப்பட்டினம்: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

தமிழக சிவசேனா யுபிடிகட்சியில் 50 மாவட்டத் தலைவா்கள் நியமனம்

நாகப்பட்டினம்: தமிழகத்தில் 50 மாவட்டத் தலைவா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே கட்சியின் மாநில பொதுச் செயலாளா் சுந்தரவடி வேலன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து,அவா் வெளியி... மேலும் பார்க்க

பன்றிகளை அப்புறப்படுத்த எச்சரிக்கை

திருமருகல்: திட்டச்சேரி பேரூராட்சியில் சுற்றித் திரியும் பன்றிகளை உடனடியாக உரிமையாளா்கள் அப்புறப்படுத்த வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) குகன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெள... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் தலைமையில் ஏப். 11-இல் ஆய்வுக் கூட்டம்

நாகப்பட்டினம்: நாகையில் ஏப்.11-இல் மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சிறுபான்மையின சமுதாய தலைவா்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு குறைகள், கருத்துகளை தெரிவிக்கலாம... மேலும் பார்க்க