செய்திகள் :

சாப்பாடு பிரச்னையில் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்... காவல் நிலையத்தில் நடத்தி வைத்த போலீஸார்

post image

குஜராத் மாநிலம், சூரத்தில், உணவுப் பற்றாக்குறையால் மணமகன் வீட்டார் நிறுத்திய திருமணத்தை, போலீஸார் காவல் நிலையத்திலேயே நடத்திவைத்த சம்பவம், வெளியில் தெரியவந்திருக்கிறது. முன்னதாக, நேற்று முன்தினம் சூரத்தின் வராச்சா பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில், பீகாரைச் சேர்ந்த ராகுல் பிரமோத் மஹ்தோ, அஞ்சலி குமாரி ஆகிய இருவருக்கும் திருமண நிகழ்வு நடந்தது.

திருமணம்

அப்போது, மாலை மாற்றிக்கொள்ளும் சடங்கைத் தவிர மற்ற அனைத்து சடங்குகளும் முடிவடைந்த வேளையில், மணமகன் குடும்பத்தினர் திடீரென உணவுப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி திருமணத்தை நிறுத்தினர். அதனால், மணமகள் வீட்டார் உதவி கேட்டு காவல் நிலையம் சென்றனர். இறுதியில், போலீஸார் மணமகன் வீட்டாரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து மணமக்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தனர்.

இது குறித்து பேசிய துணை போலீஸ் கமிஷனர் அலோக் குமார், ``திருமணத்துக்கான பெரும்பாலான சடங்குகள் முடிந்துவிட்டது. மாலை மாற்றிக்கொள்வது மட்டுமே மிச்சமிருந்தது. அப்போது, மணமகன் வீட்டார் உணவுப் பற்றாக்குறையால் இரு குடும்பத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, மணமகன் வீட்டார் திருமணத்தை நடத்த மறுத்துவிட்டனர். அதனால், மணமகள் குடும்பத்தினர் உதவி கேட்டு காவல்நிலையம் வந்தனர்.

அப்போது, மணமகன் தன்னை திருமணம் செய்யத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவரது குடும்பத்தினர் அதை மறுப்பதாகவும் மணமகள் கூறினார். பின்னர், இந்தப் பிரச்னையைத் தீர்க்க நாங்கள் உதவிய பிறகு மணமகன் வீட்டார் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டனர். இருப்பினும், மண்டபத்துக்குச் சென்றால் மீண்டும் சண்டை ஏற்படும் என்பதால், காவல் நிலையத்திலேயே மாலை மாற்றி திருமணம் செய்துகொள்ள அனுமதித்தோம்." என்று கூறினார்.

Chief Dating Officer : பெங்களூரில் காதலில் கைதேர்ந்தவருக்கு வேலை; தகுதி என்னவென்று தெரியுமா?!

காதலர் தினம் நெருங்குவதனால் காதலைச் சுற்றிய விநோதங்கள் நம் கண்முன் வந்து விழுவது எதிர்பார்த்ததுதான். ஆனால் காதலில் கைதேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் யாவருக்கும் அதிர்ச்சியாகவே ... மேலும் பார்க்க

``லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பிரச்னைகளைத் தீர்க்க இதை உருவாக்குங்கள்" - ராஜஸ்தான் நீதிமன்றத்தின் உத்தரவு

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களின் பாதுகாப்புக்குப் பொருத்தமான சட்டம் இயற்றப்படும் வரை, இந்த ரிலேஷன்ஷிப்பில் எழும் பிரச்னைகளைத் தீர்க்க வலைத்தளப் பக்கத்தை உருவாக்குமாறு மாநில அரசுக்கு ராஜஸ்தான் உ... மேலும் பார்க்க

Relationship: மிடில் ஏஜ்ல தேனிலவு ஏன் கட்டாயம் போகணும்?

இரண்டாவது தேனிலவு... தேனிலவுக்கே போகாத தம்பதியர்தான் நம்மிடையே அதிகம் பேர். இருந்தாலும், இரண்டாவது தேனிலவு செல்வது ஏன் அவசியம்; திருமணமான எத்தனை வருடங்கள் கழித்து இரண்டாவது தேனிலவுக்குச் செல்லலாம்? இத... மேலும் பார்க்க

`தன்பாலின திருமணச் சட்டம்' தாய்லாந்தில் அமலுக்கு வந்தது; அதிகாரபூர்வ திருமணம் செய்த LGBTQ+ ஜோடிகள்!

தாய்லாந்து அரசு, தன்பாலின திருமணத்துக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கிய நிலையில், இன்று (ஜன.23) `தன்பாலின திருமணச் சட்டத்தை' அமலுக்கு கொண்டு வந்தது. இதனால், நூற்றுக்கணக்கான தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்கள்... மேலும் பார்க்க

Relationship: உங்க கல்யாண வாழ்க்கை எந்த நிலைமையில் இருக்கு..? கண்டுபிடிக்கலாம் வாங்க!

ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதே உயிரினங்களின் இயற்கையான இயல்பு. அந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ விழைவது மனிதர்களின் இயல்பு. அதற்கு இந்த 5 ஸோன்களை தெரிந்துகொண்டால், மகிழ்ச்சி உங்களைவிட்டு விலகாமல் ப... மேலும் பார்க்க

Relationship: `லவ் பண்றப்போ தாய்ப்பூனை; அப்புறம் தாய்க்குரங்கு' - ஓர் இன்ட்ரஸ்ட்டிங் விளக்கம்

‘கல்யாணத்துக்கு முன்னாடி மொத ரிங் முடியறதுக்கு முன்னாடி போனை எடுத்தவர்/ன் கல்யாணத்துக்குப் பிறகு பத்து தடவை கால் பண்ணாலும் பிஸின்னு மெசேஜ் மட்டும் அனுப்புறார்/ன். அவரு/னுக்கு என் மேல லவ்வு குறைஞ்சுபோச... மேலும் பார்க்க