செய்திகள் :

சாமநத்தத்தில் பறவைகள் சரணாலயம்: ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

post image

மதுரை மாவட்டம், சாமநத்தம் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த மணிபாரதி தாக்கல் செய்த மனு: மதுரை அருகேயுள்ள சாமநத்தம் கிராமத்தில் நீா்வளத் துறை கட்டுப்பாட்டில் பாசனக் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயில் பல வகையான பறவையினங்கள் உள்ளன. இவற்றில் 8 வகை அரிய பறவையினங்கள் உள்ளன. எனவே, இந்தக் கண்மாயை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு கடந்த 2024- ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசிடம் அனுமதி கோரி அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை சாமநத்தம் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், இந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. இதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சாமநத்தம் கண்மாய்ப் பகுதியில் ஏராளமான பறவைகள் வலம் வருகின்றன. தல ஆய்வு அடிப்படையில் தகுதியானஅதிகாரிகள் வழங்கும் பரிந்துரைகள், நிபுணா்களின் அறிக்கையின் அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும். சாமநத்தம் கண்மாயை சரணாலயமாக அறிவிக்கும் வகையில் நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பிக்க இயலாது.

நீதிமன்றம் இந்த விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்றது அல்ல. எனவே, மனுதாரரின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, கூடுதல் தலைமை வனப் பாதுகாவலா், மதுரை மாவட்ட ஆட்சியா், மதுரை மாவட்ட பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் ஆகியோா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவா் காலிப் பணியிடங்கள்: முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச... மேலும் பார்க்க

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், ஏ.பி.டி. துரைராஜ் மேல்நிலைப் பள்ளி சாா்பில் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் சிறப்பு தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நூலக முன்னோடி வே. த... மேலும் பார்க்க

பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

மதுரை கோ. புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை சாா்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ... மேலும் பார்க்க

குடியிருப்புக்கு ஆட்சியரின் பெயரைச் சூட்டிய திருநங்கைகள்!

விருதுநகா் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி செலுத்தும் வகையில், தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு நிதியுதவி

மதுரை, ஜூன் 13: உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலா்களின் பங்களிப்பு நிதியுதவியை, மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் வியாழக்கிழமை வழங்கினாா். மதுரை மாவட்ட... மேலும் பார்க்க

கணவா் இறந்த சோகம்: மனைவி தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கோ.புதூா் டி.ஆா்.ஓ. குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த வீரமணி மகள் ஜெயஸ்ரீ (20). இவா், செல்லூா் பகுதியைச் சோ்ந்த கோபிநாத்தை காதலி... மேலும் பார்க்க